இடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவின் தொகுதி ஒன்றில் எதிர்வரும் திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ரொறன்ரோ சென்ட் போல்ஸ் தொகுதியில் இவ்வாறு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக கருதப்பட முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத அளவில் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இடைத்தேர்தல் முடிவுகள் மக்களின் மெய்யான பிரதிபலிப்பாக அமையும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென் போஸ் தொகுதி நீண்ட காலமாக லிபரல் கட்சியின் ஆதிக்கத்தில் காணப்படுகின்றது.
திங்கட்கிழமை நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், Ipsos நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சி 42 விதமான வாக்குகளை பெற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடிய பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்களின் ஆதரவு பலவீனமடைந்து வருவதாகவும் இது லிபரல் கட்சியின் ஆதரவினை பெருமளவு பாதிக்கும் எனவும் கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
Discussion about this post