சீரற்ற வானிலையினால் முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, இழப்பீடு வழங்குவதற்கு அல்லது வீடுகளை மீள நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, மதிப்பீடுகளை முன்னெடுத்து அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டார்.
சீரற்ற வானிலையினால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (20) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகள் தொடர்பான முறையான அறிக்கையை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு சாகல ரத்நாயக்க மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Discussion about this post