இலங்கையிலிருந்து (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளோர், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 5, 970 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னசேகர (Rathnasekara) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என கூறியபோதிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இவ்வாறாக பணம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சுமார் 2 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் கடந்த ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக தென்கொரியா (South Korea), ஜப்பான் (Japan) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகளுக்கு பல இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தனியார் முகவர் நிறுவனத்தின் மூலம் சவூதி அரேபியா (Saudi Arabia), குவைத் (Kuwait), ஜோர்தான் (Jordan), சிங்கப்பூர் (Singapore), ஜப்பான் (Japan), ஐக்கிய ராஜ்ஜியம் (United Kingdom), சைப்பிரஸ் (Cyprus), மலேசியா (Malaysia), மாலைதீவு (Maldives), தென்கொரியா (South Korea), ருமேனியா (Romania), சேர்பியா (Serbia) உள்ளிட்ட நாடுகளுக்கும் இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் தென்கொரியாவுக்கு 6,377 பேரும் ஜப்பானுக்கு 601 பேரும் இஸ்ரேலுக்கு 828 பேர் என மொத்தமாக 7,806 பேர் அரசாங்கத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தலையீடு
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு தனியார் முகவர் நிறுவனம் மூலம் சவூதி அரேபியாவுக்கு 663 பேரும் 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டுள்ளனர்.
அந்த ஆண்டில் அரசாங்கத்தின் தலையீடு இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 89 ஆயிரத்து 287 பேர் ஆகும்.
இலங்கையிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாகவும் வேறு தொழில்களுக்காகவும் எமது மக்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். முதல் தடவையாக அவ்வாறு தொழிலுக்கு செல்வோருக்கு பயிற்சிகளை வழங்குகின்றோம்.
கொரியாவுக்கு தொழிலுக்கு செல்வோருக்காக மொழி பயிற்சியும் மேலும் 10 நாள் தொழிலுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post