கனடாவில் பெண் ஒருவர்> தனது மூன்று பிள்ளைகளுடன் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மானிட்டோபா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தனது மூன்று பிள்ளைகளுடன் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண்ணை கடந்த ஒரு மாத காலமாக காணாமல் போயிருந்து கண்டு பிடிக்கப்பட்டு மீண்டும் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் தனது பிள்ளைகளை கடத்தி தலைமறைவாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் டர்ஹம் பிராந்திய போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
54 வயதான என்ற ஒன்றாரியோவின் கிளாரிங்டனைச் சேர்ந்த அஸ்ட்ரிட் சிச்ல்லர் என்ற பெண் இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண்ணை கைது செய்வதற்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மூன்று பிள்ளைகளை கடத்தியமை மற்றும் நீதிமன்ற உத்தரவினை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
12, 11 மற்றும் 9 வயதான ஆண் பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க கனடிய எல்லை பகுதியில் குறித்த பெண், பிள்ளைகளுடன் இருந்தபோது அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
பின்னர் இந்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில் வீட்டிலிருந்த பிள்ளைகளை மீண்டும் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண் குறித்த பிள்ளைகளை மீண்டும் கடத்தி தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post