கனேடிய மாகாணமொன்றில், புலம்பெயர்தல் கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள, தங்கள் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான மாற்றங்களை எதிர்த்து, புலம்பெயர்ந்தோர் பலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், நாளை குடியிருப்பு அனுமதி தொடர்பில் முக்கிய முடிவொன்று எடுக்கப்பட உள்ளதால் அவர்கள் மீண்டும் இன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.
கனடாவில் கல்வி கற்ற மற்றும் கல்வி கற்றுவரும் பலர் நாடுகடத்தப்படும் அபாயத்தை உருவாக்கியுள்ள, அரசு அறிவித்துள்ள, புலம்பெயர்தல் கொள்கை மாற்றம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவின் Prince Edward Island மாகாணத்தில் வாழும் புலம்பெயர்ந்தோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்நிலையில், நாளை, அதாவது, ஜூன் மாதம் 20 ஆம் திகதி, குடியிருப்பு அனுமதி தொடர்பில் தேர்வொன்றை (draw for nominations to the Provincial Nominee Program – PNP) அரசு நடத்த உள்ளது.
ஆகவே, நாளை மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த புலம்பெயர்ந்தோர் முடிவு செய்துள்ளார்கள்.
அனைத்து சமுதாயங்களை சேர்ந்தவர்களும், தீவு மக்களும் தங்களுக்கு ஆதரவாக தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து நிற்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அப்போதுதான், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் அரசுக்குப் புரியும் என்று கூறியுள்ள ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் 1,000 பேராவது கூடினால் இந்த கொள்கை மாற்றங்கள் எத்தனை பேரை பாதிக்கவுள்ளது என்பதை உணர்ந்து அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ளக்கூடும் என்கிறார்கள்.
Discussion about this post