சர்ச்சைக்குரிய கருத்தினை வௌியிட்டதாக நட்டாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
அவர்களுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்த தர்மத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புக் கருத்தை வௌியிட்டதாக அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்வதற்கு போதுமான சாட்சிகள் காணப்படவில்லை என சட்டமா அதிபரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
குறித்த விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் நட்டாஷா எதிரிசூரிய வௌியிட்ட கருத்து புருனோ திவாகர உள்ளிட்டவர்களினால் இணையத்தில் வௌியிடப்பட்டது.
Discussion about this post