சிங்கள பேரினவாதிகள் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் காெடுக்க மாட்டார்கள் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ( Kandiah Sivanesan) தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை (kurundurmalai) பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்றையதினம் (18.06.2024) வழிபாட்டினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் மலையினுடைய தொன்றுதொட்ட வரலாற்றில் இந்த பிரதேசம் ஆதிசிவன் ஐயனார் ஆலயமாக மக்களால் தொடர்ச்சியாக பூசிக்கப்பட்டு வருகின்றது.
அதிபர் தேர்தல்
அந்தவகையில் மிக அண்மை காலங்களாக இப்பிரதேசத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது. இதனால் இங்கே சுயமாக மக்கள் வழிபடுவதற்கு அச்சப்படுகின்றனர்.
மக்களின் பிரதான கோரிக்கை என்னவெனில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் மக்கள் சென்று சுமூகமான முறையில் வழிபட வேண்டும் என்பதே. அதே போன்றே இந்த ஆலயத்திற்கு பூசை செய்கின்ற பூசகர்கள் கூட இங்கே வர அஞ்சுகின்ற ஒரு சூழலே இருக்கின்றது.
அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. அதிலே முக்கியமான மூன்று வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அதில் யாரோ ஒருவரிடைய வேலைத்திட்டமாகத்தான் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடவுள்ள மூன்று வேட்பாளர்களும், யுத்தத்தை ஆதரித்தவர்கள். யுத்தம் நடக்க காரணமாக இருந்தவர்கள். அதாவது மக்களின் இன அழிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் என்று தான் கூறலாம்.
வடக்கு கிழக்கு இணைப்பு
அனுரகுமாரவை (Anura Kumara Dissanayake) அவர் அப்படி இல்லை என கூறலாம். ஆனாலும் கூட வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 13 ஆவது சீர்திருத்த சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்ட போது சட்டரீதியாக சென்று இணைப்பை பிரித்தவர்கள் அவர்கள் தான்.
அவரும் இந்த தேர்தலிலே முக்கியமான வேட்பாளராக இருக்கின்றார். இவர்கள் தேர்தலிலே நிற்கும் போது இவர்களின் உதவி யாரோ ஒருவருக்கு தேவையாக இருக்கின்றது.
சிங்கள மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிப்பதற்கான முயற்சியாக தான் நாம் கருதுகின்றோம். ஆகவே யாத்திரையை ஒரு வழிபாட்டுக்கான நிகழ்வாக நாம் கருதவில்லை.
தமிழ் மக்கள்
இது எங்களுடைய பிரதேசம், சங்கமித்தை தன்னுடைய சகோதரர்களுடன் மிகிந்தலைக்கு (Mihintale) சென்றிருக்கிறார். ஆனால் எந்த ஒரு வரலாற்றிலும் அவர் குருந்தூர் மலைக்கு வந்ததாக கிடையாது.
அப்படியானவர்கள் மிகிந்தலையில் இருந்து யாத்திரையாக வருகின்றார்கள் என்றால் மிகிந்தலையுடன் தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு வரலாற்றிலும் சுட்டிக்காட்டப்படவில்லை.
ஆகவே வெறுமனே ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை என்பதையே அவதானிக்க முடிகின்றது.
தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள் என்பதிலே தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஆர்வம்“ என தெரிவித்துள்ளார்.
Discussion about this post