கனடாவில் (Canada) ஒன்ராறியோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்போது, ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள ஒசாவா (Oshawa) நகரில் 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது 113 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 600,000 டொலர்கள் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பில் ஐந்து வார விசாரணைகளுக்கு பிறகு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எச்சரிக்கை
இதேவேளை, கனடா, நாளொன்றிற்கு 24 பேரை போதைக்கு பலிகொடுப்பதாகவும் வீடற்ற, தங்க இடமில்லாத, எளிதில் பாதிக்கப்படும் அபாயத்தில் பலர் இருப்பதாகவும் ஒசாவா நகரத்தின் மேயர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒசாவா நகருக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்ய வரும் யாருக்கும் இங்கு வரவேற்பில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Discussion about this post