பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை நுகர்வோருக்கு நன்மை ஏற்படும் வகையில் குறைக்க முடியுமான போதிலும் அதற்கு சட்டவிரோத வர்த்தக குழுக்கள் (Mafia) இடையூறாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றசாட்டை அகில இலங்கை (Sri Lanka) வெதுப்பக உரிமையாளர் சங்கம் முன்வைத்துள்ளது.
இதனடிப்படையில், இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமது சங்கம் அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன (N.K Jayawardena) தெரிவித்துள்ளார்.
தேவையானப் பொருட்கள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கோதுமை மா, தேங்காய் எண்ணெய் மற்றும் முட்டை உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையானப் பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இது தமது தொழிற்துறையைப் பாரியளவில் பாதித்துள்ளதாலேயே வெதுப்பக உற்பத்திகளின் விலையினைக் குறைக்க முடியாதுள்ளது.
வர்த்தக மாஃபியாக்கள்
கோதுமை மாவின் விலையினை மேலும் 30 ரூபாவினாலும் மற்றும் முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும் இருப்பினும் சட்டவிரோத வர்த்தக குழுக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கோரி அதிபருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post