வெள்ளை வானில் வந்த கறுப்பு உடை அணிந்த சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை (Kalutara) தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் வெள்ளை வானில் வந்து குறித்த இளைஞனை தாக்கி ஹீனடியங்கல தேவாலயத்திற்கு அருகில் வைத்து கடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
இதன்போது, களுத்துறை ஹீனடியங்கல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான ரொஷான் அஷான் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post