பிலிப்பைன்ஸ் நாட்டில் பருவநிலை மாற்றத்தால் ஜனவரி முதல் ஜூன் 1 வரை டெங்கு காய்ச்சலால் சுமார் 70,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 197 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பருவநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு, தண்ணீர் தேங்குவது போன்ற காரணங்களால் மழைக்காலத்தின் துவக்கத்திலேயே டெங்கு உள்ளிட்ட தண்ணீரால் பரவும் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த மே மாத இறுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மழைக்காலம் தொடங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post