தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சமகால அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) இந்த நாட்டுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
கொள்கை திட்டங்கள்
நிமால் லான்சா, ரவி கருணாணாயக்க மற்றும் வஜிர அபேவர்தன போன்றவர்களே அதிபருக்கு தற்போது ஆதரவாக உள்ளனர்.
ஆனால், அவர்களிடம் இந்த நாட்டை கட்டியழுப்புவதற்கான கொள்கை திட்டங்கள் எதுவும் கிடையாது அத்தோடு ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்கள் என கூறிக்கொள்பவர்கள் இந்த நாடு வீழ்ச்சிப்பாதைக்கு செல்வதற்கு வழிவகுத்தவர்கள் என்பதையும் அனைவரும் அறிவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post