சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கான அங்கீகாரத்தை வழங்குவதை அரசியலமைப்பு சபை ஒத்திவைத்துள்ளது.
நேற்றைய தினம் (10) இடம்பெற்ற அரசியலமைப்பு சபைக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கலந்துரையாடலுக்காக விவாதத்தை ஒத்திவைக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சேவை நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம்
ராஜரத்தினத்தின் தற்போதைய பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க அதிபர் முன்மொழிந்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் தேவைப்படுவதால் அது தாமதமாகியுள்ளது.
அரசியலமைப்பு சபை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardhana) அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது சட்டமா அதிபர் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post