எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்கும்போது, பழைய சம்பளத்தையே சிலருக்கு வழங்கவேண்டி ஏற்பட்டாலும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டாயமாக புதிய சம்பளத்தை வழங்க நேரிடும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
10 ஆம் திகதி சம்பளம் வழங்கப்பட்டாலும் ஒவ்வொரு மாதத்தின் முதலாம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையே சம்பளம் கணக்கிடப்படுவதாக அவர் கூறினார்.
எனவே, இந்த மாதத்தின் 10 நாட்கள் மாத்திரமே அதிகரித்த சம்பளத்துடன் தொடர்புபடும் என்பதால், இந்த மாதம் 10 ஆம் திகதி சம்பளத்தை வழங்கும்போது பழைய சம்பளத்தையே சிலருக்கு வழங்க முடியுமென அவர் தெரிவித்தார்.
எனினும், அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டாயமாக புதிய சம்பளத்தை வழங்க வேண்டுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறினார்.
அது மாத்திரமன்றி, பழைய சம்பளத்தின் நிலுவை கொடுப்பனவையும் இந்த மாதத்தின் பத்து நாட்களுக்கு அதிகரித்த சம்பளத்தையும் நிறுவனங்கள் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
தனியார் தோட்டங்களில் சம்பளத்தை வழங்குவதற்கு முன்னதாக அரச தோட்டங்களில் சம்பளத்தை வழங்கி அரசாங்கம் முன்னுதாரணமாக செயற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெல்வோம் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வில் கலந்துகொண்டபோதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
Discussion about this post