நாட்டின் சில பகுதிகளில் துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையால், எதிர்வரும் 17 ஆம் திகதி ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (07) நடைபெற்றது.
பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நாட்டின் பல பகுதிகளில் துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்தமையினால், இலங்கைவாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடலாம் என தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு முன்னைய நாள் அரபா நோன்பை நோற்குமாறும் இன்று அறிவிக்கப்பட்டது.
Discussion about this post