ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் கல்வி உதவித் தொகை கொடுப்பனவு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் பெற்றோருக்கு உதவும் நோக்கில் இவ்வாறு உதவுத்தொகை வழங்கப்பட்டது.
பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாகாண அரசாங்கம் சுமார் 1.1 பில்லியன் டாலர் கொடுப்பினைவு தொகையை பெற்றோருக்கு வழங்கியுள்ளது.
மொத்தமாக நான்கு கட்டங்களாக இந்த கொடுப்பனவுத் தொகையை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
மில்டன், பிரம்டன், மிஸ்ஸசாகா மற்றும் பேரி ஆகிய பகுதிகளில் அதிகளவான கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுப்பனவுத் தொகைக்காக சுமார் 5.9 மில்லியன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் இந்த கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாறியோ மாகாணத்தில் கொடுப்பனவுத் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படும் சில முகவரிகள் அந்த மாகாணத்தில் இல்லாதவை என தெரிவிக்கப்படுகிறது.
சில பெற்றோருக்கு இந்த கொடுப்பனவு தொகை கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தத் தொகையை ஏற்கனவே வேறு ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஒன்றோரியாவின் குறைகேள் அதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
Discussion about this post