ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்கான நிதியை வழங்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கே இந்த நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவுள்ளதாக சபையின் உதவிப் பொது முகாமையாளர் நிஹால் பிரசன்ன (Nihal Prasanna) தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொழில்சார் கற்கைநெறியை கற்க ஒரு மாணவருக்கு ஐம்பதாயிரம் ரூபா வழங்கப்படும் என உதவிப் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
சித்தியடையாத மாணவர்கள்
இந்த நிலையில், சமூகம் ஏற்றுக்கொள்ளாத வேலைகளில் அந்த மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தான் உயர்தரத்தில் சித்தியடையாத மாணவர்களை மாத்திரம் தெரிவு செய்வதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த படிப்புகள் மூன்றாம் நிலை மற்றும் தொழில்முறை கல்வி ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post