மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பருவப்பெயர்ச்சி நிலைமை காரணமாக மழையுடனான வானிலை தொடர்ந்து நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post