இலங்கையில் (Sri Lanka) தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை இதன் விளைவாகவே பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என்பதற்கான முக்கிய காரணம் என மகப்பேறு மருத்துவர் அஜித் பெர்னாண்டோ (Ajith Fernando) தெரிவித்துள்ளார்.
கணிசமான வீழ்ச்சி
இந்நிலையில், குழந்தை பெற்ற சில தம்பதிகள் இரண்டாவது குழந்தையைப் பற்றிக் கருத்தில் கொள்வதில்லை என்பதோடு குழந்தை இல்லாதவர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.
முன்னதாக இலங்கை வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அண்மையில் குறிப்பிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.
Discussion about this post