ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கும் இஸ்ரேலை ஆதரிக்க மாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இல்லையேல் அப்பகுதியில் கட்டுப்படுத்த முடியாத போர்ச் சூழல் உருவாகலாம் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளமைக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
இஸ்ரேல் மீதான வான்வழித் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பிராந்திய அண்டை நாடுகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்தப்போவதாக அமெரிக்காவிற்கும் சில நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மீண்டும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாவிட்டால் இந்த நெருக்கடி இத்துடன் முடிவுக்கு வரும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பதிலடி
இதேவேளை, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி கடந்த சனிக்கிழமை(13) நடத்தப்பட்ட தாக்குதலை விட பெரிய அளவிலான பதில் இருக்கும் என்று மேஜர் ஜெனரல் கூறினார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என முகமது பாகேரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி கடந்த சனிக்கிழமை(13) நடத்தப்பட்ட தாக்குதலை விட பெரிய அளவிலான பதில் இருக்கும் என்று மேஜர் ஜெனரல் கூறினார்
Discussion about this post