வெனிசுலா நாட்டைச் சேர்ந்த உலகின் மிக வயதான ஜுவான் விசென்டே மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்த 114 வயதான ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, 1909 மே மாதம் 27-ம் திகஹ்டி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார்.
மேலும் கடந்த 2022-ம் ஆண்டில் உலகின் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காரரானார்.
இந்த நிலையில் தற்போது உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா தனது 114 வயதில் மரணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இவரது மறைவுக்கு அதிபர் நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post