பொதுவாகவே புடலங்காயை சமையலில் பயன்படுத்துவது மிகவும் குறைவு. ஆனால் அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
உடலில் உள்ள கெட்ட நீரை புடலங்காய் வெளியேற்றும். சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளை புடலங்காய் சரிசெய்யும்.
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் புடலங்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.
ஆண்மைக் குறைவு பிரச்சனை இன்று பலருக்கு இருக்கிறது. அதற்கு பல மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். புடலங்காய் சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பிரச்சனை நீங்கும்.
வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை புடலங்காய் சாப்பிட வேண்டியத அவசியம். அனைவரும் விரும்பும் வகையில் திருமண வீடுகளில் வெய்வது போன்று புடலங்காய் கூட்டு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் – 1/2 கிலோ கிராம்
கடலை பருப்பு – 200 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தே.கரண்டி
சீராக தூள் – 1/2 தே.கரண்டி
சோம்பு – 1 தே.கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையானவை :
எண்ணெய் – 2 தே.கரண்டி
பெருங்காய தூள் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை – 2 தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊறவைத்த கடலைப்பருப்பை ஆகியவற்நை குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு பல் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீராக தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து கொரகொர பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் 5 விசில் வந்து பிரஷர் தானாக அடங்கும் வரை காத்திருந்து குக்கரை திறக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை 4 நிமிடங்களுக்கு மீண்டும் மூடி சமைக்க வேண்டும்.
இதற்கிடையில் மற்ற அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
இந்த தாளிப்பை குக்கரில் வேக வைத்த கூட்டின் மீது ஊற்றி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் புடலங்காய் கூட்டு தயார்.
Discussion about this post