கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்சி 12000 டொலர்களை இழந்துள்ளார்.
கிறிப்டோ கரன்ஸி முதலீட்டு திட்டமொன்றில் முதலீடு செய்யுமாறு பிரதமர் கோருவதாக போலி காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியை பார்வையிட்ட குறித்த நபர், பிரதமரினால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் முதலீட்டுத் திட்டம் என கருதியுள்ளார்.
இதனால் தாம் பணத்தை முதலீடு செய்ததாகவும், இது சட்ட ரீதியானது என தாம் கருதியதாகவும் தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோவைச் சேர்ந்த ஸ்டீபன் ஹென்றி என்ற நபரே இவ்வாறு போலி முதலீட்டு திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்துள்ளார்.
தம்மிடம் சேமிப்பில் இருந்த பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்ததாகவும் தற்பொழுது நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டீப் பேக் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக ஒருவரின் காணொளியை உருவாக்கி இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post