இதயத்தையும், சருமத்தையும் பாதுகாக்கும் மீன் எண்ணெய் மாத்திரைகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
கடல் உணவுகளில் ஒன்றான மீன்களை நேரடியாக உண்ண முடியாதவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை சாப்பிடலாம்.
இதயம் தொடர்பான நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது மீன் எண்ணெய் மாத்திரையை தான். வாரத்தில் இரண்டு முறை கண்டிப்பாக மீன் வகைகளை சாப்பிட வேண்டும் என்று அமெரிக்க இதய நோய் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்
மீன் எண்ணெய் மாத்திரையானது ஒமேகா 3 அதிகமுள்ள சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
மாரடைப்பு நோய்க்கு காரணமாக அமையும் கொலஸ்ட்ராலை மீன் எண்ணெய் குறைப்பதுடன், ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகின்றது.
மன அழுத்தத்தை போக்கு சுறுசுறுப்பாக வைத்திருக்க மீன் எண்ணெய் மாத்திரை உதவுகின்றது. மேலும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றதாம். இதனால் குழந்தை பேறு பெறும் வாய்ப்பை பெறலாம் என்று விஞ்ஞானிகள கூறுகின்றனர்.
மூட்டு மற்று முழங்கால் வலிகள், முடக்குவாதம் தொந்தரவுகளை தடுக்கவும், கால்சியம் குறைபாட்டினால் உருவாகும் எலும்பு பிரச்சினையையும் சரிசெய்கின்றது.
புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்ட மீன் எண்ணெய் மாத்திரைகள் ஆஸ்துமா பிரச்சினையுக்கும் தீர்வு அளிக்கின்றது.
சருமத்தை பளபளப்பாக்கவும், நரம்புகளின் பாதிப்பை நீக்கவும், கண்பார்வை குறைபாடுகளை போக்கவும், வயிற்றிலுள்ள புண்களை ஆற்றவும் மீன் எண்ணெய் மாத்திரைகள் உதவுகின்றது.
வரப்பிரசாதம்: மூளையின் செயல்பாட்டுத்திறனையும் இது அதிகரிக்க செய்கிறது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மீன் எண்ணெய் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கலோரிகள் எரிப்பதை விரைவுப்படுத்துகிறது.
ஆனால், மீன் எண்ணெய் மாத்திரையை அதிகமாக சாப்பிடக்கூடாது.. நிறைய மீன் மாத்திரைகளை சாப்பிட்டால் வயிறு உபாதைகள் ஏற்படலாம்.. தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்படும்.. அத்துடன், ஈறுகள், மூக்கில் ரத்தப்போக்குக்கு வரலாம். அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருபவர்களும், மீன் எண்ணெய் மாத்திரை எடுத்து கொள்ளக்கூடாது.. காரணம், ஆபரேஷன் நடைபெற்ற இடத்தில் ரத்தக்கசிவு அதிகமாக ஏற்படுமாம்.
ரத்த அழுத்தம்: அதேபோல, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரையை தவிர்க்கலாம்.. எனவே, ஆரோக்கியமாக இருப்பவர்கள், உடலில் எந்தவித நோயும் இல்லாமல் இருப்பவர்கள், ஒருநாளில் ஒன்றரை டீஸ்பூன் மட்டுமே இந்த எண்ணெய்யை சாப்பிடலாம்.. அதுவும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
Discussion about this post