கனடா சென்ற ஜே வி பி அநுரகுமார திசநாயக்காவை கனடா விமான நிலையம் ஒன்றில் வரவேற்கும் இலங்கையர்கள் பிடித்துள்ள பதாதையில் சிங்கள் மற்றும் தமிழ் மொழிகளில் எழுத்தப்பட்டு ஆங்கிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சிங்கக்கொடியுடன்.. சிங்களமொழியிலும், தமிழ் மொழியிலும் எழுதப்பட்ட வாசகம் மட்டுமே அத்த பதாதையில் உள்ளது. ஆனால் கனடாவின் பிரதான மொழிகா உள்ள ஆங்கிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய
தினம் (21) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க கனடாவை சென்றடைந்தார். அநுரகுமார திஸநாயக்கவுக்கு கனடா – ரொறன்ரோ விமான நிலையத்தில் கனடா வாழ் இலங்கையர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் அநுரகுமார திஸநாயக்க பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,
இந்த பதாதை, சிங்ககொடி எல்லாமே கூறும் விடயம்..!
கனடாவில் உள்ள சிங்களமக்களையும், தமிழ்மக்களையும் மட்டும் சந்தித்து தாம் ஶ்ரீலங்கா ஜனாதிபதியாக தெரிவாவதற்கான பிரசாரத்திற்கான ஒரு யுக்தியாக இதை நோக்கமுடிகிறது.
கனடாவில் ஈழத்தமிழர்கள் கூடுதலாக வாழ்கிறார்கள் அவர்களையும் இவர் சந்திப்பார்.
சிங்கக்கொடியுடன் சந்திக்கப்போகும் அநுராவுக்கு ஈழத்தமிழர்கள் என்ன கூறுவார்கள் என்பதை பார்ப்போம்.
இமாலயப்பிரகடனத்திற்கு பின்னணியில் உள்ளவர்களும் அங்குதான் உள்ளனர் என பா.அரியநேத்திரன் கூறியுள்ளார்.
Discussion about this post