யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில் அண்மையில் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றது. போட்டி நாட்களில் மாணவர்கள் உற்சாகமாக வீதிகளில் பாண்ட் வாத்தியம் இசைத்து ஆடி பாடி மகிழ்ந்தனர்.
பிள்ளைகளுடன் அயல் பாடசாலைகளில் சிரமதானம்
அதன் போது அயலில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் முன்பாகவும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு தகவல் கிடைத்து , அவ்வாறு கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களில் அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிபர் , பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து, பிள்ளைகளுடன் அயல் பாடசாலைகளுக்கு சென்று சிரமதான பணிகளை செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
அதிபரின் பணிப்புரையை ஏற்று பெருமளவான பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சென்று அயல் பாடசாலைகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரியவருகின்றது.\
‘
இந்நிலையில் அதிபரின் செயற்பாடு குறித்து வடமாகாண கல்வி பணிமனைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து , வலய கல்வி பணிமனை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
Discussion about this post