ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அனுரகுமார திஸாநாயக்க அந்த கதிரையில் அமர்வதால் மட்டும் நாடு முன்னேறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதுவரை பின்பற்றப்பட்ட தவறான பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டின் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் எனவும், மக்கள் விடுதலை முன்னணி அவ்வாறு மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்
அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி இந்த நாட்டில் தோற்ற கட்சியை துன்புறுத்தும் கலாசாரத்தை கொண்டுள்ளதாகவும், தோல்வியடைந்த கட்சி மீண்டும் தனது அரசாங்கம் வரும் வரை காத்திருப்பதாகவும், இந்த அரசியல் கலாசாரமும் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post