குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமைச்சரவை அங்கீகாரம்
குறைந்த வருமானம் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்துக் கொண்டு மாவட்டச் செயலாளர்கள் அரசாங்க அதிபர் மூலமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post