அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது அவசியமானால் நூற்றுப் பதின்மூன்று எம்.பி.க்களின் கையொப்பப் பட்டியலை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்த அரசியல்வாதிகள் குழுவிடம் அதிபர் ரணில் இதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரணில் தெரிவித்த பின்னரும்
எனினும், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நூற்றுப் பதின்மூன்று கையொப்பங்களைக் கொண்டு வர வேண்டும் என அதிபர் தெரிவித்த பின்னரும், அந்த செயற்பாடு நிறைவேற்றப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதேவேளை அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவேண்டுமென பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அண்மையில் ஊடகமொன்றுடனான நேர்காணலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post