எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
சுருங்கியிருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் எனத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post