நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின் போது அதிக தண்ணீர் அல்லது பானங்களை அருந்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார்.
அதோடு வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள், வீதிகளில் வேலை செய்பவர்கள், இராணுவத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரணம் சம்பவிக்கலாம்
வெயில் காலங்களில் வெளியில் இருக்கும் போது வெள்ளை நிற எளிமையான பருத்தி ஆடையை அணிவதுடன், தொப்பி அல்லது வேறு தலையை மறைப்பது முக்கியம் எனவும் மது அருந்துவதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இந்த நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது மிகவும் பொருத்தமானது என்றும் குழந்தைகளை தண்ணீரில் இருக்க விடுவதும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர் கூறினார்.
மேலும், குழந்தைகளை வாகனங்களில் நிறுத்திவிட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கடும் வறட்சியான காலநிலையுடன் சரியான காற்றோட்டம் இன்மையினால், வாகனங்களில் வெப்பம் தாக்கி குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்றும் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.
Discussion about this post