இலங்கையில் தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த வெப்பமான காலநிலையை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மிகவும் வெப்பமான காலநிலை கடந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமானது. தற்போது 8 மாவட்டங்கள் வெப்ப அபாயப் பிரதேசங்களாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலை
கொழும்பு, கம்பஹா, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த காலநிலையின் போது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post