Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home கனடா

கனடா மற்றும் அமெரிக்காவில் வேகமெடுக்கும் ஜாம்பி மான் நோய்!

February 21, 2024
in கனடா
கனடா மற்றும் அமெரிக்காவில் வேகமெடுக்கும்  ஜாம்பி மான் நோய்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா மற்றும் அமெரிக்காவில் மான்களுக்கு ‘ஜாம்பி மான் நோய்’ வேகமாக பரவி வருகிறதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த நிலையில் ஜாம்பி மான் தொற்றுநோய் மனிதர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.

ஜாம்பி மான் நோய்
ஜாம்பி மான் நோய் என்று அழைக்கப்படும் இந்த நோய் ஒரு நாள்பட்ட விரயம் நோய் (chronic wasting disease). நரம்பியல் தொற்று நோயான இது, விலங்குகளை பாதித்து கொல்லும் தன்மை கொண்டது.

சரியான முறையில் ஒன்று சேராத பிரோடின்கள் (Proteins) பிரியான்ஸ் (prions) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரியான்ஸ், தொற்றாக மாறும் நிலையில், நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளை மற்றும் பிற உறுப்புகளில் நிலைகொள்கிறது. இதன் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு ஜாம்பி போன்று உடல் செயல்பட தொடங்கும்.

எச்சில் வடிதல், தடுமாறுதல், சோம்பல் மற்றும் வெற்றுப் பார்வை போன்றவை இந்த தொற்றுக்கான அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த தொற்று தற்போது அமெரிக்காவில் உள்ள மான்களை பெருமளவு பாதித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த நோய்க்கு ஜாம்பி மான் நோய் என்ற பெயர் வந்துள்ளது.

கனடாவில் சஸ்காட்செவன், ஆல்பர்ட்டா மற்றும் கியூபெக் ஆகிய இடங்களில் உள்ள மான்கள் மற்றும் மனிடோபா பகுதியில் இருக்கும் காட்டு மான்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தேசிய பூங்காவில் முதலில் தொற்று உறுதி
தொடர்ந்து, அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் முதலில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மான்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடமான், எல்க் மற்றும் கரிபோ ஆகிய விலங்குகளிலும் தொற்றுக்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நோயின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக கனடாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலை வழங்கியுள்ளார்.

அதேசமயம் கனடா சுகாதார பிரிவு அதிகாரிகள், ஜாம்பி மான் நோய் மனிதர்களுக்கு பரவும் என்று கூறுவதற்கு சரியான ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்திருக்கும் நிலையில், கால்கேரி பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஹெர்மன் ஷாட்ஸ்ல் என்றவர் நடத்திய முந்தைய ஆராய்ச்சியில் இந்த வகை தொற்றுகள் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.

அதில், அவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் படி, விலங்குகளிடம் இருந்து தொற்றுகள் பரிமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விலங்கு கறிகளை உட்கொள்ளுவதால், இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை என தெரிவித்த அவர், ஆனால், எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous Post

பேக்கரிகள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

Next Post

நடுவானில் பறந்த கனடா விமானத்திற்கு மிரட்டல்

Next Post
நடுவானில் பறந்த கனடா விமானத்திற்கு மிரட்டல்

நடுவானில் பறந்த கனடா விமானத்திற்கு மிரட்டல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.