2019 ஆம் ஆண்டு முதன் முதலில்சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக மக்கள் அனைவரையும் முடக்கிப்போட்டதுடன், கொரோனா தொற்றால் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து கொரோனாவை தடுப்பதற்கு பல்வேறு தடுப்பூடிகள் கண்டுபிடிக்கபட்டதை தொடர்ந்து உலகம் முழுவது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாப்பட்டிருந்தது.
Forbes இதழ் தகவல்
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளான , பைசர் (Pfizer), மோர்டானா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை மிகப்பெரிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என Forbes இதழ் தெரிவித்துள்ளது.
ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள், நோய்த்தடுப்பு தடுப்பூசி கொவிட் நோய் பரவுவதைத் தடுக்கும் என்பதால், அந்த ஆபத்தை எடுப்பதில் தவறில்லை என்று கூறியுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்வில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் நோய்த்தடுப்பு மருந்து பெற்ற 99 மில்லியன் மக்களிடமிருந்து பெறப்பட்ட பதிவுகள் பயன்படுத்தப்பட்டன.
ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழு, 13 நோய்களைக் கண்டறிந்தது.பைசர், மோர்டானா மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு, அந்த நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து எவ்வாறு அதிகரித்தது என்பதை ஆய்வு செய்தது.
மாடர்னா எம்ஆர்என்ஏ மற்றும் ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியின் மூன்று டோஸ்களைப் பெற்ற பிறகு, மாரடைப்பு அபாயம் பொதுவாக எதிர்பார்க்கப்படுவதை விட 6 மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த அளவைப் பெற்றவர்கள் 6.9 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முழுமையான ஆய்வு அறிக்கை தடுப்பூசி மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு 13 நிலைமைகளை உருவாக்கும் ஆபத்து எவ்வாறு அதிகரிக்கிறது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post