பால் என்பது கால்சியம் நிறைந்த உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது.
உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.
நாட்டு பசுக்களின் பாலில் உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது.பால் என்னதான் இவ்வளவு நன்மை தருவதாக இருந்தாலும் அதை அதிகமாக குடிக்க கூடாது .
அவ்வாறு குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன.பால் அதிகமாக குடிப்பதால் உடலில் என்ன என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தீமைகள்
1.பால் ஆரோக்கியமாகவும் சத்து நிறைந்தாக இருந்தாலும் இதை ஒரு நாளில் அதிகமாக குடித்ததால் அது உடலில் பல பக்க விளைவுகளை உருவாக்கும்.
பொதுவாக பெண்கள் ஒருநாளில் ஒரு கப் பாலை விட அதிகமாக குடித்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.மற்றும் இது பெண்களின் இறப்பு விகிதத்தை இரட்டிப்பாக்கும்.
2.பால் குடித்து கொண்டிருப்பவர்கள் பால் குடிப்பதை முற்றாக நிறுத்த வேண்டிய தேவை இல்லை ஒரு நாளக்கு ஒரு கிளாஸ் பால் நீங்கள் குடித்து வந்தால் அது உங்களக்கு சிறந்த பலனை தரும்.
அப்போதுதான் இதில் உள்ள வைட்டமின் டி, வைட்டமின் பி 12 மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் பயனுள்ள அளவில் கிடைக்கும்.
3.அதிகப்படியான பாலை குடிப்பதால் குடலில் கசிவுத்தன்மை எற்படும் என ஒரு ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பாலில் ஏ 1 கேசீன் இருப்பதால் அது குடலில் அழற்சியை உருவாக்கி ஆபத்தை வரவழைக்கும்.
இதனால் பால் அதிகமாக குடித்தவுடன் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
4.முழு கொழுப்புள்ள பாலை உட்கொள்வதால் மாற்ற மடியாத முகப்பரு வரும் என்பது மருத்துவ, ஒப்பனை மற்றும் புலனாய்வு தோல் மருத்துவ ஆய்வில்,வெளியிடப்பட்ட தகவலாகும்.
மற்றும் வீக்கம் செரிமானப்பிரச்சனை வரவும் அது வழி வகுக்கும்.சில வேளைகளில் வயிற்றுப்போக்கு வரவும் வாய்ப்பு உள்ளது.
Discussion about this post