இன்று பலரும் போராடுவது உடல் எடையை குறைக்கத்தான், உடல் எடை அதிகரித்துவிட்டாலே அதுவே பல நோய்களுக்கு அடித்தளமாகிறது.
எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ள டயட், உடற்பயிற்சி, உணவுகளில் மாற்றம் என பலவற்றை மேற்கொள்கிறார்கள்.
கடினமாக உடற்பயிற்சிகளாக இருந்தாலும் நம் உணவுகளில் செய்யும் மாற்றமும் முக்கியமாகிறது.
சரிவிகத உணவுகள், நேரம் தவறாமல் சாப்பிடுவது என பச்சை இலைக்காய்கறிகள், கீரைகள், பழங்கள், மாமிச உணவுகள் என நம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
இந்த பதிவில் உடலில் கொழுப்பை குறைக்கும் தண்டுக்கீரை கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம்.
இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய தண்டுக்கீரையில், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்திருக்கிறது.
மூட்டு வலி, உடல் சூடு, மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் நல்ல பலனை பெறலாம்.
பெண்களுக்கு கருப்பையில் இருக்கும் பிரச்சனையை சரிசெய்கிறது, ரத்த அழுத்தம் அதிகம் கொண்டவர்கள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
கஷாயம் தயாரிக்க
தண்டுக்கீரை- ஒரு கைப்பிடி
மிளகு – 10
மஞ்சள் தூள் – தேவையான அளவு
செய்முறை
முதலில் தண்டுக்கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும், மிளகை தட்டி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 5 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சூடானதும் கீரை, மிளகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து தண்ணீர் பாதியளவு வந்தவுடன் வடிகட்டி குடிக்கவும், காலை, மாலை என இரு வேளையும் குடித்துவர சிறந்த பலனை பெறலாம்.
இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் சிறந்த அருமருந்தாகும்.
Discussion about this post