4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் 19 வயது பெண் காசாளர் ஒருவர் களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயாகல, ஹல்கந்தவில, துவகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Discussion about this post