கனடாவில் பால்வினை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிபிலிஸ் எனப்படும் பால்வினை நோய் பரவுகை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய பொதுச் சுகாதார அலுவலகத்தின் பிரதானி டொக்டர் திரேசா டேம் இந்த நோய் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் பல நாடுகளைச் போன்றே கனடாவிலும் சிபிலிஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துச் செல்வதாக சுடடிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக நோயாளர் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் சுமார் 13953 பேர் சிபிலீஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் 117 சம்பவங்கள் தாயிடமிருந்து சிசுவிற்கு பரவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கர்பகாலத்தில் தாயிடமிருந்து சிசுவிற்கு சிபிலிஸ் பரவுகை ஆறு மடங்காக உயர்வடைந்துள்ளது.
Discussion about this post