நாட்டில் திருமண வீதமும் பிறப்பு வீதமும் படிப்படியாகக் குறைந்து வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கணக்கெடுப்பின் தரவுகளை அறிவித்த பேராசிரியர், புதிதாகப் பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வதற்கு தகுதியான ஆண் ஒருவரை தேடுவது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர் சனத்தொகையில் கணிசமான குறைவைக் காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பேராசிரியர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.
Discussion about this post