ரொறன்ரோவில் கடுமையான குளிருடனான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஓரளவு வெப்பநிலையுடனான வானிலை நிலவியிருந்த நிலையில் இந்த வாரம் முழுவதிலும் குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய வானிலை மையம் இந்த எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளது. இன்று முதல் பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில், ரொறன்ரோவில் 86 ஆண்டு கால வெப்பநிலை சாதனை முறியடிக்கப்பட்டிருந்தது.
இன்று வெப்பநிலை 2 பாகை செல்சியஸாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 0 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Discussion about this post