கனடிய அரசாங்கம் சில்லி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக அறிவித்துள்ளது.
கனடிய தீயணைப்பு படையினரை அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தீயணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் சில்லி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீ பாதிப்புக்களின் போது சில்லி நாட்டு படையினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.
இந்த பெறுமதிமிக்க உதவிகளுக்கு பிரதி உபகாரமாக கனடிய தீயணைப்புப் படையினர் சில்லி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சில்லி நாட்டில் காட்டுத் தீ காரணமாக நூற்றுக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் பாரியளவு பொருட்கள் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சில்லிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள தீயணைப்புப் படை குறித்த விபரங்களை கனடிய அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.
Discussion about this post