அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் வெந்தயம் முக்கியமானதாகும். இதனை உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெந்தயத்தின் நன்மைகள்
வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணத்தை சரிசெய்யவும் உதவுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது, நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வெந்தயம் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுவதால், இதய நோய்களின் அபாயம் குறைகின்றது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, அதிகப்படியான ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.
மேலும் வெந்தயம் தலைமுடியை வளர்ச்சிக்கும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது.
வெந்தயத்தை சாம்பார், ரசம், தோசை, இட்லி போன்ற உணவுகளில் சேர்க்கலாம். அதுமட்டுமில்லாமல் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, தண்ணீருடன் கலந்து குடிக்கலாம். மேலும் வெந்தயத்தை ஊற வைத்து, அதன் தண்ணீரை குடிக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் வெந்தயத்தை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு சிலருக்கு வெந்தயம் ஒவ்வாமை பிரச்சினை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதனை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
Discussion about this post