யாழ்ப்பாண பகுதியில் பெண்ணொருவர் மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியொன்றே இந்த விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருமணம் செய்து 4 மாதங்களாகிய நிலையில் தற்போது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கொழும்பில் கணினி துறையில் பணியாற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து, 32 வயதான பொறியிலாளர் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.
மனைவிக்கு மது அருந்தும் பழக்கமிருப்பது திருமணத்தின் பின்னரே தனக்கு தெரிய வந்ததாகவும், இதனால் தனது சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவி மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபடுவதால் தனது வயதான பெற்றோர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்தின் பின்னர் தனது நண்பிகளுடனான விருந்தொன்றில் மது அருந்தி விட்டு போதையில் வந்ததாகவும், அது எதேச்சையான சம்பவமாக இருக்கலாமென தான் பெரிதாக எடுக்கவில்லையென்றும், இருப்பினும், வார இறுதிகளில் நண்பிகளுடன் மது அருந்தி விட்டு போதையில் வீட்டுக்கு வருவதால் தகராறு ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனைவியுடன் பேசி இணக்கப்பாடு எட்ட முடியவில்லையென்றும், மது அருந்துவது தனது தனிப்பட்ட உரிமையென்றும், அதில் தலையிட வேண்டாமென மனைவி கறாராக பேசுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post