தென்னிலங்கையின் பெலியத்தையில் கஞ்சா செடிகளுடன் அமெரிக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அமெரிக்கர் வாடகைக்கு எடுத்த வீட்டில் இருந்தே இந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணை
கட்டடத்தின் மேல் தளத்தில் பானைகளில் கஞ்சா செடிகள் நாட்டப்பட்டு பொலித்தீன்களால் அவை மூடப்பட்டிருந்ததை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
எனினும் கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கான உரிமம் அமெரிக்கரிடம் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தாவரங்களை தாம் முதலீடாக வளர்த்து வருவதாக அந்த அமெரிக்கர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
Discussion about this post