அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதி ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு முதலை இழுத்துச் சென்ற தமிழ் கைதி 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
முதலையின் தாக்குதலுக்கு இலக்கான அவர்இ ஒரு கைஇ கால் மற்றும் கழுத்து பகுதியில் காயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11ஆவது விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மறைந்திருந்த முதலை
சிறைச்சாலைப் பகுதியில் உள்ள மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் குறித்த கைதியும் இன்னும் சில கைதிகளும்இ பயிர்ச் செய்கைகளில் திங்கட்கிழமை (22) ஈடுபட்டிருந்த போது மூங்கில் புதருக்குள் மறைந்திருந்த முதலை கைதியின் காலைப் பிடித்து மல்வத்து ஓயாவுக்கு இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே கைதியை முதலை தாக்கியதாக வெளியான தகவலை மறுத்த சிறைச்சாலை சிரேஷ்ட அதிகாரி ஒருவர், பயிர்ச்செய்கையில் திங்கட்கிழமை (22) மாலை ஈடுபட்டிருந்த போதே முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவித்தார்.
Discussion about this post