2024 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய விசா கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் விசாவில் இனி தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
மாணவர் விசாவை பயன்படுத்தி பலர் பிரித்தானியாவில் வேறு பணிகளுக்காக நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விசா கட்டுப்பாடுகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும், இதன் மூலம் பிரித்தானியாவுக்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரின் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த விதியிலிருந்து முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post