ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது.
“ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய விமானசேவைக்கு போயிங்-777 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்காவிற்கும் இடையே வாரத்தில் 4 நாட்கள் ஒரு குறிப்பிட்ட அட்டவணையின்படி விமானசேவைகள் நடத்தப்படவுள்ளன.
இதற்கான வெளிநாட்டு விமானச் செயற்பாட்டுச் சான்றிதழை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பி.ஏ.ஜெயகாந்த , கட்டுநாயக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில், ரோசியா விமான நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளின் தலைவர் நிகிதா டோல்கோவ் இடம் 12/29 அன்று வழங்கினார்.
Discussion about this post