எந்தவொரு சர்வதேச மாணவர்களும் இந்த மாதத்திலிருந்து அவர்களது குடும்பத்தினரை அழைத்துவர முடியாது என
பிரித்தானியா அறிவித்துள்ளமை மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியமர்வை கட்டுப்படுத்த பிரதமர் ரிஷி சுனக் நடவடிக்கை
எடுத்துவருகின்றார்.
அந்தவகையில் சர்வதேச மாணவர்கள் நாட்டுக்கு வரும் போது அவர்களின் குடும்பத்தை அழைத்து வருவதை
கட்டுப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
முதுகலை படிப்புகள் அல்லது அரச நிதியுதவியுடன் கூடிய படிப்புகளில் ஈடுபடுபவர்களை தவிர, எந்தவொரு சர்வதேச
மாணவர்களும் இந்த மாதத்திலிருந்து அவர்களது குடும்பத்தினரை அழைத்துவர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 140,000 குறைவான மக்கள் பிரித்தானியாவிற்குள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் விசா முறையை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த
மே மாதம் இந்த மாற்றங்கள் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post