தமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமது சிறுமிகளான மகள்களை பெரிய கோடீஸ்வரர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த விவசாயிகள் விற்றுவருவது தொடர்பான செய்தி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 10 தொடக்கம் 12 வயதுவரையான சிறுமிகள் 40 தொடக்கம் 50 வயதுடைய கோடீஸ்வரர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றனர்.
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் இந்த விவசாய செய்கைக்கு பெற்ற கடனை அடைப்பதற்காகவே விவசாயிகள் இவ்வாறு தமது மகள்களான சிறுமிகளை விற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடனை அடைப்பதற்காக தனது மகளை 40 வயதுடைய நடுத்தர வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்ததாக 10 வயது சிறுமி ஒருவரின் தந்தை தெரிவித்துள்ளார்.மேலும், திருமணத்திற்கு ஈடாக, அந்த நபர் அந்த விவசாயிக்கு நிறைய பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிலர் 13 வயதிலும், சிலர் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை விற்று வருவது தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இளவயது திருமணம் காரணமாக, பாடசாலைகளில் பிள்ளைகள் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்கு வந்தவுடனேயே பெண் குழந்தைகளுக்கு நிச்சயதார்த்தம் அல்லது திருமணம்” என்று தெரிவித்துள்ளனர்.
Discussion about this post