தரமற்ற தடுப்பூசிகளை விநியோகித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (2023.12.28) மீண்டும் சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த 2023.12.27 அன்று வழங்கிய உத்தரவின் பிரகாரம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான ஆய்வுகூடத்தை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Discussion about this post